தமிழர் கழகத்தின் கட்சி அமைப்பு பல அடுக்குகளைக் கொண்டதாகும். மாநில செயற்குழு முதல் வார்டு குழுக்கள் வரை பல அடுக்குகளைக் கொண்டது.
தமிழர் கழகம் கீழ்க்கண்ட அமைப்புகளைக் கொண்டு செயல்படும்:
(அ) மாநில தலைமை செயற்குழு
(ஆ) மாவட்ட குழுக்கள்
(இ) வட்டார குழுக்கள்
(ஈ) பஞ்சாயத்து| நகர பஞ்சாயத்து குழுக்கள்
(உ) கிராம பஞ்சாயத்து குழுக்கள்
(ஊ) வார்டு குழுக்கள்
(எ) பொது குழு
பொது குழு என்பது தமிழர் கழகத்தின் செயல் உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
தமிழர் கழகத்தின் ஆட்சி மன்ற குழு என்பது அதன் மாநில தலைமை செயற் குழுவாகும். அக்குழுவில் 7 பேர் இடம் பெறுவார்கள் தலைவர் மற்றும் 6 நிர்வாகிகளை கொண்டது. மற்ற நிர்வாகிகள் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.
மாநில செயற்குழுவே தமிழர் கழகத்தின் அனைத்து நிர்வாக விஷயங்களுக்கும் பொறுப்பாகும்.