தமிழர் கழகத்தின் தலைமை என்பது, இன்றைய மேடைப் பேச்சில் திறமையை காட்டும் தலைவர்களைப் பொல் இருக்கமாட்டார்கள். ஒழுக்க நெறியும், நேர்மையும், எளிமையும், மக்களுக்கு தன்னலமற்ற தொண்டு செய்வதும்தான் அவர்களுடைய அடிப்படை பண்புகளாகவும், தகுதியாகவும் இருக்கும். அவர்கள் உடல், மனம் அளவில் ஆரோக்கியமாகவும், விழிப்புடனும், ஆன்மீகத்தில் உன்னதமான நிலையை அடையப் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் மாபெரும் சமூக தத்துவ மேதையும் மிக உயர்ந்த ஆன்மீக தந்தையுமான ஸ்ரீ பி.ஆர். சர்க்கார் அவர்களால் வழங்கப்பட்ட முறபோக்கு பயன்பாட்டு கொள்கையான (பிரௌட்) பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்தும் முனைப்பு கொண்ட தலைவர்களாகவும் இருப்பார்கள். அந்த கொள்கையை தங்களுடைய சாதனா, தொண்டு மற்றும் தியாகத்தின் மூலம் நிறைவேற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
இறுதியாக, 19-ஆம் நூற்றாண்டு முதலாளித்துவ கொள்கை மக்களை தவறாக வழி நடத்தியது. மனிதனுடைய அதிக அளவில் சுரண்டுவதற்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் மனிதனுடைய அற்புதமான முன்னேற்றம் தொழில் புரட்சியை கொண்டுவந்துள்ளது. ஆனால் அதன் பலனை முதலாளி வர்க்கம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. 90 சதவிகித உலகின் சொத்துக்கள் 8 சதவிகித முதலாளிகளிடம் குவிந்துள்ளது.
மக்களுடைய உழைப்பின் பயன் மக்களை சென்றடைய வேண்டும். இதைத்தான் முற்போக்கு பயன்பாட்டு கொள்கையாளர்களாகிய (PROUT) தமிழர் கழகம் பொருளாதார ஜனநாயகம் என்றழைக்கிறது. பணம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் காரணமாக பொருளாதார ஜனநாயகத்தின் கீழ் மனிதனின் மதிப்பு சிறந்தமுறையில் வளம்பெறும்.
ஒழுக்க நெறியில் சிறந்த தமிழர் கழகத்தின் தலைவர்கள் மக்களிடத்தில் சமூக பொருளாதாரம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்போதுள்ள சமூக பொருளாதார சுரண்டலை வேரோடு களையும் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொள்வர். “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழர் கழகம் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறது.
தேர்தல் என்பது தமிழர் கழகத்தின் இலட்சியமல்ல, ஆனால் அது மேற்சொன்ன இலட்சியத்தை அடையும் ஒரு செயல் நோக்கம் என்ற முனைப்போடு செயல்படும்.