• தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

தமிழர் கழகத்தின் பல்வேறு குழுக்கள்

கிராம பஞ்சாயத்து குழு (ருன்வை ஊழஅஅவைவநந): கிராம பஞ்சாயத்திலுள்ள (ருன்வை) பொது குழு உறுப்பினர்கள் 3 குழு உறுப்பினர்களை தெர்ந்தெடுப்பார்கள். இக்குழுவிற்கு மேலும் 2 உறுப்பினர்களை பஞசாயத்து குழு நியமிக்கும். இந்த 5 பேர் கொண்ட குழு வட்டார குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பஞ்சாயத்து| நகர பஞ்சாயத்து குழு: ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட பொது குழு உறுப்பினர்கள் 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். மேலும் 3 உறுப்பினர்களை வட்டார குழு நியமிக்கும். இக்குழு மாவட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வட்டார குழு: ஒரு வட்டாரத்திலுள்ள பொது குழு உறுப்பினர்கள் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் 3 உறுப்பினர்களை மாவட்ட குழு நியமிக்கும். இக்குழு மாநில தலைமை செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மாவட்ட குழு: ஒரு மாவட்டத்திலுள்ள பொது குழு உறுப்பினர்கள் மாவட்ட குழுவிற்கு 8 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். மேலும் 4 உறுப்பினர்களை மாநில தலைமை நிர்வாக குழு நியமிக்கும். இக்குழு ப்ரௌட்டிஸ்ட் கூட்டமைப்பினால்(Pளுளு) ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

மாநில குழு: தமிழர் கழகத்தின் பொது குழு உறுப்பினர்கள் (யுஉவஇஎந ஆநஅடிநசள) 12 உறுப்பினர்களை தெர்ந்தெடுப்பார்கள். மேலும் 6 உறுப்பினர்களை அகில இந்திய சர்வ சமாஜ கூட்டமைப்பு நியமிக்கும்.

நிர்வாகிகள் தேர்தல்

தமிழர் கழகத்தின் தலைவரே மாநில குழுவின் தலைவராவார். மாநில குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தெர்ந்தெடுப்பார்கள். தலைவர் தலைமை நிர்வாக குழுவின் மற்ற 6 நிர்வாகிகளை நியமிப்பார். இந்த 7 தலைமை கழக நிர்வாகிகள் தமிழர் கழகத்தின் தலைமை நிர்வாக குழுவாகும். இந்த தமிழர் கழகத்தின் மாநில குழு தேசிய குழு உறுப்பினர்களால் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு; ஒபபுதல் அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட செயலாளர்

தமிழர் கழகத்தின் மாவட்ட செயலாளரே மாவட்ட குழுவின் தலைவராவார். மாவட்ட குழுவின் தலைவரை மாவட்ட குழு உறுப்பினர்களில் ஒருவரை தங்களுக்குள் தெர்ந்தெடுப்பார்கள். மற்ற நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் நியமிப்பார். அவ்வாறு அமைக்கப்பட்ட குழு மாநில தலைமை செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வட்டார செயலாளர்

தமிழர் கழகத்தின் வட்டார செயலாளரே வட்டார குழுவின் தலைவராவார். வட்டார குழுவின் தலைவரை வட்டார குழு உறுப்பினர்களுள் ஒருவரை தங்களுக்குள் தெர்ந்தெடுப்பார்கள். மற்ற நிர்வாகிகளை வட்டார செயலாளர் நியமிப்பார். அவ்வாறு அமைக்கப்பட்ட குழு மாவட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பஞ்சாயத்து| நகர பஞ்சாயத்து செயலாளர்

தமிழர் கழகத்தின் பஞ்சாயத்து| நகர பஞ்சாயத்து செயலாளர் என்பவர் பஞ்சாயத்து| நகர பஞ்சாயத்து குழு தலைவராவார். பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து தலைவரை பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து செயலாளர் மற்ற நிர்வாகிகளை நியமிப்பார். அக்குழு வட்டார குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கிராம பஞ்சாயத்து செயலாளர்

தமிழர் கழகத்தின் கிராம பஞ்சாயத்து செயலாளரே கிராம பஞ்சாயத்து குழுவின் தலைவராவார். கிராம பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். மற்ற நிர்வாகிகளை செயலாளர் நியமிப்பார். அக்குழு வட்டார குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட குழுக்கள் அனைத்தும,; மாவட்ட குழு முதல் கிராம பஞ்சாயத்து குழு வரை தலைமை செயற்குழுவின் அங்கீகாரத்திற்காக உரிய கட்டணத்துடன் ஒரு வார காலத்திற்குள் தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.