தமிழர் கழகம் தமிழர் நாகரிகம் மற்றும் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களின் சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் மேன்மைக்காக பாடுபடும் ஒரு தன்னலமற்ற இயக்கமாகும்.
1. மக்களிடத்தில் சமூக பொருளாதாரம் பண்பாடு மற்றும் அரசியல் விழிப்புணர்வை புகட்டுவதன் மூலமும் முற்போக்கு பயன்பாட்டு கொள்கையை (பிடிரளட்) நடைமுறைபடுத்துவதற்கு இணக்கமான சூழலை ஏற்படுத்துவதன் மூலமும் முன்னேற்றமான சமத்துவ கொள்கையையும் இந்தியாவின் இறையாண்மை ஓற்றுமை மற்றும் வலிமையை உறுதிபடுத்துவது.
2. எந்த உருவத்திலிருந்தாலும் சுரண்டல் ஊழல் மற்றும் அனைத்து நிலைகளிலும் அநீதியை ஒழித்து அனைத்து முனைகளிலும் மனித சமுதாயத்தை முன்னேற்றம் காணச் செய்வது.
3. ஒழுக்கக்கேடு பிடிவாதம் ஆகியவற்றை போக்கி சாதித்துவம இன பாகுபாடு பிரிவினைவாதம் பிராந்திய பற்று போன்ற பிரிவினை சக்திகளிடமிருந்து சமுதாயத்தை விடுவித்தல்.
4. இந்திய மக்களிடையே அவர்களுடைய உன்னதமான ஆன்மீக பாரம்பரியம் வளமான பாரம்பரியமிக்க பண்பாடு மற்றும் பலதரப்பட்ட இயல்புகொண்ட மொழிகளின் வாயிலாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்து இந்திய மக்களிடையே பிரிவினையில் ஒற்றுமையை உறுதி செய்வது.
5. நல்லொழுக்கம் மிகுந்த தலைமை மற்றும் சமூகத்தில் பொருளாதாரத்தில் மற்றும் அரசியல் வட்டத்திலும் நிர்பந்தமில்லாத ஊழலற்ற மற்றும் சுயநலமற்ற உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துதல்.
6. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப குறைந்தபட்ச தேவைகளான உணவு உடை மருத்துவம் வீடு மற்றும் கல்வி ஆகியவற்றை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது.
7. சிறப்பு தகுதி பெற்றவர்கள் (விஞ்ஞானிகள்| மருத்துவர் பொன்றவர்கள்) சுற்று சூழலுக்கேற்ற சிறப்பு வசதிகள் அளித்தல். மேலும் அனைவருக்கும் அதிகபட்ச வசதிகள் கிடைக்க முயற்சி மேற்கொள்ளுதல்.
8. இந்த பூமியிலுள்ள வளங்கள் எதுவும் மனிதனால் படைக்கப்பட்டதல்ல. ஆகவே இந்த பூமியிலுள்ள வளங்கள் செல்வங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தின் பொது சொத்தாகும். எனவே எந்த ஒரு தனி மனிதனும் கூட்டமைப்பின் தெளிவான அனுமதியின்றி தேவைக்கு அதிகமாக சொத்துக்களை குவித்து வைத்துக்கொள்ள கூடாது.
9. இந்த உலகிலுள்ள திடபொருட்கள் நீர் காற்று ஒளி மற்றும் வின்வெளியிலுள்ள வளங்கள் மனித சமுதாயத்தின் நலனுக்காக முன்னேற்றமான முறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல். அந்த வளங்களை விவேகமான முறையில் பகிர்ந்தளித்தல்.
10. உடல் மனம் மற்றும் ஆன்மீக ஆற்றலை தனி மனிதன் மற்றும் அனைத்து மனித சமுதாயத்தின் கூட்டு நலனுக்காக அதிகபட்சமாக பயன்படுத்துதல். கூட்டு நலன் என்பது தனி தனிதனுடைய உடல் மனம் மற்றும் ஆன்மீக நலனை உறுதிபடுத்துதல்.
11. தனி நபர் மற்றும் கூட்டு நலனை மேம்படுத்தும்பொழுது உடல மனம் மற்றும் ஆன்மீக வட்டத்தில் சரியான இணக்கம் இருத்தல் வேண்டும். ஆகவே மக்கள் தங்களுடைய குறைந்தபட்ச தேவைகளை வாங்குவதற்கு 100 சதவிகிதம் வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்வதோடு அவர்களுடைய குறைந்தபட்ச தேவையை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுதல்.
12. பயன்படுத்தும் முறை காலம இடம் மற்றும் நபர் ஆகியவற்றுக்கேற்ப மாறுபட வேண்டும். மேலும் முற்போக்கான விஞ்ஞான முறையில் பயன்படுத்துதல்.