• தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

உறுப்பினர்

அடிப்படை உறுப்பினர்கள்: 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமகன் எவரும் தமிழர் கழகத்தில் உறுப்பினர் ஆகும் தகுதி பெற்றவர் ஆவார். அவர்கள் தமிழர் கழகத்தின் உறுப்பினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவ்வப்போது தமிழர் கழகத்தின் மாநில நிர்வாக குழுவால் நிர்ணயிக்கப்படும் வருடாந்திர உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். அடிப்படை உறுப்பினர்கள் தமிழர் கழகத்தின் ஆஸ்தி, பொறுப்புகள் மற்றும் வசதிகளை அனுபவிக்கலாம் ஆனால் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும், நிர்வாக குழு உறுப்பினராக தெர்நதெடுக்கப்படவோ முடியாது.

செயல் உறுப்பினர்கள்: செயல் உறுப்பினர்கள் என்பவர்கள் தமிழர் கழகத்தின் தலைமை செயற்குழுவால் நியமக்கப்படுவார்கள். அவர்கள் தமிழர் கழகத்தின் அனைத்து ஆஸ்தி, பொறுப்புகள் மற்றும் வசதிகளை அனுபவிக்கலாம். மேலும,; செயல் உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், நிர்வாக குழு உறுப்பினர்களாக தெர்ந்தெடுக்கப்படவும் உரிமையுடையவர்கள் ஆவார்கள்.

தீவிர உறுப்பினர்கள் கீழ்க்கண்ட அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்:

(அ) அவர்கள் முற்போக்கு பயன்பாட்டு கொள்கைகளை (பிரௌட்) நன்கு அறிந்திருக்க வேண்டும், தமிழர் கழகத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

(ஆ) அவர்கள் ஒழுக்க நெறியாளராகவும், ஒழுக்கக் கேடான நெருக்கடிகளுக்கு இணங்காதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

(இ) தமிழர் கழகத்தின் மூலம் சமுதாய தொண்டாற்ற தயாராக இருக்க வேண்டும். தமிழர் கழகத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எவ்வித தியாகத்திற்கும் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

(ஈ) புதிய மனித நேயத்தின் மீது நம்பிக்கையுடையவராகவும், எல்லா வகையான குறுகிய கோட்பாடுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.

(உ) அவர்கள் குறைந்தது 25 உறுப்பினர்களையாவது அடிப்படை உறுப்பினர்களாக கட்சியில் சேர்த்தவராக வேண்டும்.

(ஊ) குறைந்தது ஒரு வருடத்திற்காவது அடிப்படை உறுப்பினராகவோ அல்லது செயல் உறுப்பினராகவோ கட்சி பணியாற்றியிருக்க வேண்டும்.

(எ) 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

3. செயல் உறுப்பினர்களுக்கு மஞ்சள் கலந்த சிவப்பு நிற உறுப்பினர் அடையாள அட்டை தமிழர் கழகத்தின் மாநில செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

தற்காலிகமாக உறுப்பினர் நீக்கம் :

அடிப்படை உறுப்பினர் அல்லது தீவிர உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக கீழ்க் கண்ட காரணங்களுக்காக நீக்கலாம:

(அ) தமிழர் கழகத்தின் ஒழுக்க விதிகளை மீறுபவர்கள்;

(ஆ) தமிழர் கழகத்தின் நலனுக்கு எதிராக செயல்படுதல்;

(இ) முற்போக்கு பயன்பாட்டு கொள்கையை (ப்ரௌட்) உள்நோக்கத்துடன் தவறாக திரித்து கூறுதல்.

தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர்களுடைய நேர்வு தலைமை செயற் குழுவினால் நியமிக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவரிடமிருந்து விளக்கம் கோரும். அவர் குற்றம் நிரூபனமானால் அக்குழு அவர்களை தகுதி நீக்கம் செய்யும். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தலைமை செயற்குழுவிடம் ஒரு வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். மெல்முறையீட்டில் தலைமை செயற்குழுவின் முடிவே இறுதியானதாகும்.