• தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

தொழிற் கொள்கை

தொழில்கள் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படும், 1. முக்கிய தொழில்கள் 2. கூட்டுறவு தொழில்கள் மற்றும் 3. தனியார் நிறுவனங்கள்.

முக்கிய தொழில்கள்

கூட்டுறவுத் தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வழங்கக் கூடிய, மின்சாரம், உருக்காலை, உரங்கள, இராணுவ தளவாடங்கள, எண்ணெய, எரிவாயு, சிமென்ட், நிலக்கரி, இயந்திர உதிரி பாகங்கள், கனரக பொறியியல் சாதனங்கள் மற்றும் பெட்ரோலிய இரசாயன பொருட்கள் போன்ற தொழில்கள் முக்கிய தொழில்களின் கீழ்; வருகின்றன. இந்த தொழில்கள் இலாப, நட்டமில்லாத அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

கூட்டுறவுத் தொழில்கள்

முக்கிய தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து தொழில்களும் இதன் கீழ் வருகின்றன. இந்த தொழில்கள் கூட்டுறவு முறையில் நடத்தப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்கள்

அனைத்து சிறு நிறுவனங்களான சமையல் தொழில், பொது வியாபாரம், சலவை, தையல,; மருத்துவம், வழக்கறிஞர்கள், பழுது பார்த்தல் முதலிய நிறுவனங்கள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன. இவை தனியார் தொழில் முனைவோர்களால் சொந்தமாக நிர்வகிக்கப்படும்.