முற்போக்கு பயன்பாட்டு கொள்கை ( Progressive Utilization Theory ) மகாகுரு ஸ்ரீ பி.ஆர். சர்க்கார் அவர்களால் 1959-ஆம் ஆண்டு உலக மக்களின் நலனுக்காக வழங்கினார். முற்போக்கு பயன்பாட்டு கொள்கையானது அனைவருக்கும் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகள் கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. முதற்கட்டமாக தமிழர்; கழகம் குறைந்தபட்ச தேவைகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஜனநாயக முறையிலான அனைத்து வழிகளிலும் தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு பாடுபடும். இரண்டாவது நூறு சதவிகிதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க பாடுபடும்.
ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் கூடிய முற்போக்கான பொதுவுடைமை கொள்கையான முற்போக்கு பயன்பாட்டு கொள்கை (PROUT) அதிகார பரவல் முறையில் பொருளாதார திட்டமிட வேண்டும் என்று கூறுகிறது. ஆகவே, உள்;ர் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக உள்;ர் மக்களாலேயே பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு கூட்டுறவு முறையில் நடைமுறைப்படுத்துவதாகும் முற்போக்கு பயன்பாட்டு கொள்கை.
வேளாண் கொள்கை
விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நல்ல விதைகளை இலவசமாகவோ அல்லது மலிவு விலைக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். விவசாயிகள் இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும். சிறு விவசாயிகள் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுடைய உற்பத்தியை அதிகரித்து வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். வேளாண்மை, விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் மட்டுமே தொழிற்சாலை அந்தஸ்தை பெறமுடியும்.
சமூகப் பொருளாதார அலகுகள்
பொருளாதார ஜனநாயகம் என்பது பொருளாதார அதிகாரபரவல் மூலம் மட்டுமே சாத்தியமாகும். பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தன்னிறைவு கொண்ட சமூகப் பொருளாதார அலகுகளாக மறுசீரமைக்கப்பட வேண்டும். மேலும், ஒரே புவியியல் மண்டலங்களாகவும், ஒரே பொருளாதார பிரச்சினைகள் மற்றும் ஒரே பாரம்பரியமான கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
வட்டார அளவிலான திட்டமிடல்
மக்களின் அனைத்து வகையான முன்னேற்றத்திற்கு, ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட வட்டார அளவில,; அதிகார பரவல் முறையில் திட்டமிடுதல் வேண்டும். திட்டமிடுதல் கீழ் மட்டத்திலிருந்து செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர மேல் மட்டத்திலிருந்து திணிக்கப்படக் கூடாது. வட்டார அளவிலான திட்டமிடுதலே அடிப்படை பொருளாதார திட்டமிடுதலாகும். திட்டமிடுதல், விவசாயம், வேளாண் தொழில்கள் மற்றும் வேளாண் உபகரணங்களுக்கான தொழில்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக இருத்தல் வேண்டும். திட்டமிடுதல் உள்;ர் திட்ட வல்லுநர்களால் தயாரிக்கப்பட வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் பற்றி சரியான நபர்களுக்கு பயிற்றுவிப்பது திட்டமிடுபவர்களின் கடமையாகும். ஏனெனில், வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைபடுத்துவது சமூகப் பொருளாதார கல்வி மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
பொருளாதார சமண்பாடு
பொருளாதார சமண்பாடு என்பது, விவசாய தொழில் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கிடையே சரியான இணக்கம் இருத்தல் வெண்டும். 30 முதல் 40 சதவிகிதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபடவேண்டும், 20 சதவிகிதம் மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், 20 சதவிகிதம் விவசாய சாதனங்கள் சம்மந்தமான தொழில்களிலும், 10 சதவிகிதம் மக்கள் வர்த்தகம் மற்றும் வணிகத்திலும், 10 சதவிகிதம் மக்கள் நிர்வாக பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
இட ஒதுக்கீடு கொள்கை
தனி நபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கோ இட ஒதுக்கீடு அளிப்பது நலிவுற்ற பொருளாதாரத்தின் அடையாளமாகும். ஒருமுறை பொருளாதார ஜனநாயகம் நனவாகிவிட்டால் எந்த ஒரு மனிதனுக்கோ அல்லது வகுப்பினருக்கோ வாழ்வதற்கு இட ஒதுக்கீட்டின் உதவி தேவையிருக்காது. இருப்பினும் தற்சமயத்திற்கு பின்வரும் வழிமுறைகளை இடஒதுக்கீடு விஷயத்தில் பின்பற்றலாம்:-
முதல் முன்னுரிமை – சமூகத்திலும், பொருளாதாரத்திலும்
பின்தங்கியவர்கள்.
இரண்டாவது முன்னுரிமை –– பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
மூன்றாவது முன்னுரிமை – சமூகத்தில் பின்தங்கியவர்கள்
கல்வி கொள்கை
கல்வி என்பது மக்களை அவர்களுடைய உலகியல் தேவைகளிலிருந்தும், உளவியல் பந்தங்களிலிருந்தும் விடுவித்து ஆன்மீக உயர்வை நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். கல்வி என்பது, மக்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான குறைந்தபட்ச தேவைகளை பெறுவதற்கு, அவர்களுடைய வாங்கும் திறனை அதிகபடுத்தும் வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். அது, கலை மற்றும் இலக்கியம், வரலாறு மற்றும் தத்துவம், உளவியல் மற்றும் சமூகவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை வளர்க்கும் அளவில் நின்றுவிடாமல் உளவியல் பந்தங்களிலிருந்து அறிவை விடுவிக்கும் அடிப்படையில் மனிதனுடைய மதிப்பை வளமாக்கும் வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். ஆன்மீக வளர்ச்சிக்கான மனோ-ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கும் வகையிலும் கல்வி அமைய வேண்டும்.
கல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். கல்வி கொள்கையை வகுப்பது கல்வி புகட்டுபவர்கள் மற்றும் கல்வியாளர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் அல்லது அதிகார வர்க்கத்தினரின் கையில் இருக்கக் கூடாது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் வேளாண்மை மற்றும் தொழில்கள் நவீனமயமாக்கப்பட்டு உற்பத்தி செலவை குறைக்க முடியும்.
வெளியுறவு கொள்கை
புதிய மனிதநேய அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
வர்த்தகம் மற்றும் வணிகம்
தாராளமய கொள்கை பொருளாதார வலிமை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடாமல் இருக்க வேண்டும். தாராளமயம் என்பது, செல்வம் மற்றும் பொருளாதார வலிமை பொருளாதார தாராளமயத்தின் மூலம் மக்களின் கைகளில் இருத்தல்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மிக வேகமான முன்னேற்றத்தின் காரணமாக சொத்துக்களை உலகமயமாக்குவது இன்றைய தேவையாக இருக்கிறது. ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தை உலகமயமாக்குவது என்று அர்த்தமல்ல. மக்களுடைய பொருளாதாரத்தை உலகமயமாக்குவதாகும். கூட்டுறவு மூலம் வட்டார அளவில் உற்பத்தி செய்யும்போது மட்டுமே இது சாத்தியமாகும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்தரம் வாய்ந்த பொருட்களை பல்வேறு மூலதனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் உலக மயமாக்குவதற்கு அடிப்படையாக அமையும்.
தொழிலாளர் கொள்கை
பயன்பாட்டுக்கான பொருட்கள் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் பணியாளர் கூட்டுறவு அமைப்புகளால் சொந்தமாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும்பொருட்டு ஊதிய இழப்பு ஏற்படாமல் பணிபுரியும் நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேலைவாய்ப்பளிப்பது சமூக கடமையாகும்.
வேலை நேரம் குறைக்கப்படுவதன் மூலம் மீதமாகும் நேரத்தை பணியாளர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ளவும் மனவளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ளவும் ஊக்கப்படுத்த வேண்டும்.
அதிகபட்ச ஊதியத்திற்கும், குறைந்தபட்ச ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கு இடைவிடாமல் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் கீழ்மட்டத்திலுள்ள பணியாளர்கள் தங்கள் வாழ்வில் அதிகப்படியான வசதிகளைப் பெற இயலும். ஊயர்ந்தபட்ச ஊதியத்திற்கும், குறைந்தபட்ச ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளி படிப்படியாக நீக்குவதுதான் முன்னேற்றமான பொதுவுடமை தத்துவத்தின் அறிகுறியாகும், அடையாளமாகும்.