முற்போக்கு பயன்பாட்டு கொள்கை ( Progressive Utilization Theory ) மகாகுரு ஸ்ரீ பி.ஆர். சர்க்கார் அவர்களால் 1959-ஆம் ஆண்டு உலக மக்களின் நலனுக்காக வழங்கினார். முற்போக்கு பயன்பாட்டு கொள்கையானது அனைவருக்கும் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகள் கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. முதற்கட்டமாக தமிழர்; கழகம் குறைந்தபட்ச தேவைகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஜனநாயக முறையிலான அனைத்து வழிகளிலும் தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு பாடுபடும். இரண்டாவது நூறு சதவிகிதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க பாடுபடும்.
முற்போக்கு பயன்பாட்டு கொள்கை (பிரௌட்) மற்றும் மேற்சொன்ன தமிழர் கழகத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பாடுபடும் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். முற்போக்கு பயன்பாட்டு கொள்கைக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படும், தமிழர் கழகத்திற்கு எதிராக செயல்படும், சாதி, மதம், மற்றும் பிராந்திய நொக்கத்தின் அடிப்படையில் பிரிவினைவாதத்துடன் செயல்படும் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாது, அவர்களுடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளும்.
அடிப்படை உறுப்பினர்கள்: 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமகன் எவரும் தமிழர் கழகத்தில் உறுப்பினர் ஆகும் தகுதி பெற்றவர் ஆவார். அவர்கள் தமிழர் கழகத்தின் உறுப்பினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவ்வப்போது தமிழர் கழகத்தின் மாநில நிர்வாக குழுவால் நிர்ணயிக்கப்படும் வருடாந்திர உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். அடிப்படை உறுப்பினர்கள் தமிழர் கழகத்தின் ஆஸ்தி, பொறுப்புகள் மற்றும் வசதிகளை அனுபவிக்கலாம் ஆனால் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும், நிர்வாக குழு உறுப்பினராக தெர்நதெடுக்கப்படவோ முடியாது.
எங்களை பற்றி
தமிழர் கழகம் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக நோக்கமாக கொண்ட தன்னலமற்ற சேவை இடையீடு ஒரு சமூகப் பொருளாதாரஇ கலாச்சார மற்றும் அரசியல் அமைப்பு ஆகும்.
தமிழர்கழகம்
விரைவு இணைப்புகள்