1. மறைமுக வரிகள் இரத்து.
2. மக்களுக்கு குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை, வீடு, இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வி வழங்குதல் ஆகியவற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
3. எரிபொருள் விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
4. உற்பத்தி செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5. சாலை போக்குவரத்து சுங்கவரி இரத்து செய்யப்படும்.
6. சேவை வரி இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
7. தமிழர் கழகம் ஆட்சிக்கு வந்தால் இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை என்ற நோக்குடன் மக்களுக்கு தொண்டு மனப்பான்மையுடன் செயல்படும்.
8. அடிமட்டத்திலிருந்து ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
9. தமிழர் கழகம் எந்த உருவிலும் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கும் என்ற உத்திரவாதத்தை மக்களுக்கு அளிக்கிறது.
10. அரசின் நிர்வாகம் விரைவாகவும,; வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் செயல்படும்.
11. வருமான வரியை இரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
12. பொருளாதார ஜனநாயகம் ஏற்படுத்துதல் - அதாவது, உழைப்பவருக்கே முழு பயனும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
13. தொழில் வரி இரத்து செய்யப்படும்.
14. கீழ் மட்டத்திலிருந்து பொருளாதார திட்டமிடுதல், பொருளாதார திட்டமிடுதலில் உள்;ர் மக்களை பங்கு பெறச் செய்யும்.
15. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு உள்;ரிலேயே உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் பொருட்டு தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் போக்குவரத்து செலவை குறைத்து உற்பத்தி செலவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
16. உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதில் இடைத் தரகை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
17. விவசாயத்தை தொழிலாக அறிவித்தல்.
18. சிறு விவசாயிகளை கூட்டுறவு முறையில் விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்துதல்.
19. நீர் வளத்தை பாதுகாப்பதற்கும், நீர் வளத்தை பெருக்குவதற்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்.
20. நதி நீர் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்ககப்படும். ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
21. நீர் பாசன துறைக்கென தனி துறை உருவாக்கப்படும். புதிதாக ஏரிகள் மற்றும் குளங்கள் உருவாக்கப்படும்.
22. விவசாயம், விவசாயம் சார்ந்த உணவு பொருட்கள் உற்பத்தி, வேளாண் உபகரணங்கள் தயாரிப்பு, தொழிற்சாலை உற்பத்தி ஆகியவற்றுக்கிடையே சரியான விகிதாச்சாரத்தை பின்பற்றப்படும்.
23. அணுசக்தியை மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படும் வகையில் கொள்கை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
24. மின்சாரம் மற்றும் எரிபொருள் உற்பத்தியில் மரபுசாரா தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்.
25. நாட்டின் காடுகள் பாதுகாத்தல் மற்றும் காடு வளர்த்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
26. தனி மனிதர்கள் இயற்கை வளங்களை சுரண்டுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
27. இயற்கை வளங்கள், மனம் மற்றும் உடல் வலிமை ஆகியவை முன்னேற்றமான வகையில் சரியான முறையிலும் அதேசமயம் அதிகபட்சமாகவும் பயன்படுத்தப்படும்.
28. மத்திய மாநில அரசுகள் இணைந்து மீனவ குழுக்கள் அமைத்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை காணப்படும்.
29. புதிய வெளியுறவு கொள்கை உருவாக்கப்படும்.
30. கச்ச தீவு மீட்கப்பட வெண்டும் என்ற அடிப்படையில் கச்சத் தீவு ஒப்பந்தம் குறித்து மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும். தீர்வு ஏற்படும் வரை மீனவர்கள் கச்ச தீவில் மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
31. பிற மாநில அரசுகளுக்கிடையெ அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
32. பொருளாதார சமநிலையை பராமரிப்பதற்கு புதிய பொருளாதார கொள்கை உருவாக்கப்படும்.
33. உள்நாட்டு பாதுகாப்புக்கு, குறிப்பாக, அனைத்து நிலைகளிலும் பெண்கள் பாதுகாப்பிற்கு செயல்முறை திட்டம் வகுக்கப்படும்.
34. எங்கள் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கியதாக ஆதாரம் இருந்தால் உடனே இராஜினாமா| பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
35. வெளிநாட்டு முதலீடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
36. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தடை செய்யப்படும். சிறு வணிகர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.
37. குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படமாட்டாது.
38. விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க அந்தந்த பகுதிகளில்| மாவட்டம் தோறும் அரசுடன் விவசாயிகள் பங்களிப்புடன் குழுக்கள் அமைக்கப்படும்.
39. மதுவை ஒழித்து, மது இல்லாத மாநிலமாக திகழ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் மது பழக்கமே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.
40. மின் கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
41. தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை காணப்படும்.
42. மின்சார பயன்பாட்டில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.
43. பேருந்து கட்டணம் குறைக்கப்படும். பேருந்துகள் முறையாக பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
44. நூறு சதவிகித வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழர் கழகம் உத்திரவாதம் அளிக்கிறது.
45. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
46. உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் - அத்தியாவசிய உணவு பொருள்கள் விலை நிர்ணயம் செய்யப்படும். கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படும்.
47. உணவு பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ள சந்தையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
48. உடல், மனம் ஆகிய மட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம அந்தஸ்து கிடைக்க தமிழர் கழகம் பாடுபடும்.
49. நெசவாளர் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும்.
50. சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். ஓவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 100 லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
51. வெளிப்படையான ஒப்பந்த புள்ளி மற்றும் நிர்வாக குறைகள் மற்றும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
52. நீதி. நிர்வாகம் ஆகிய அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படும்.
53. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்படுவார்கள்.